பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

சென்னை: சென்னை: பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்துகளின் உரிமை மீட்பு பிரசார பயண நிறைவு விழா பொதுக்கூட்டம் கடந்த 31ம் தேதி நடந்தது. கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரான சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது,‘ ஸ்ரீரங்கம் கோயில் எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்று தான் இந்துகளின் எழுச்சி நாள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் சார்பில், சர்ச்சைக்குரிய வீடியோ ஆதாரத்துடன், சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது 6ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின் மீது,  கனல் கண்ணன் மீது கலவரத்தை தூண்டுதல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்த அவர் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் போலிஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், பாண்டிச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் கனல் கண்ணன் தலைமறைவாக இருப்பதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் பாண்டிச்சேரிக்கு விரைந்து தலைமறைவாக இருந்த கனல் கண்ணணை கைது செய்தனர்.

Related Stories: