இந்தியாவின் அடையாளங்களாக திகழும் காந்தி, நேரு போன்ற தலைவர்களை பிரதமர் மோடி இழிவுபடுத்திவிட்டார்: காங். தலைவர் சோனியாகாந்தி கண்டனம்..!!

டெல்லி: சுதந்திர போராட்ட தியாகத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சோனியா காந்தி, மகாத்மா காந்தி, நேருவுக்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது. இந்தியாவின் அடையாளங்களாக திகழும் தலைவர்களை பிரதமர் மோடி இழிவுப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் ஜனநாயக மாண்பையே பிரதமர் மோடி சசீர்குலைத்து வருகிறார் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு விடுதலை பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நாடு முழுவதும் ஓராண்டுக்கு சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு சுதந்திர தினம் முதல் இந்த கொண்டாட்டங்கள் பின்பற்றப்பட்டன.  டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

பின்னர் உரையாற்றிய பிரதமர், இன்றைய தினம் நாம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய முன்னோர்களை, தியாகிகளை நினைவு கூர வேண்டிய தருணம். அவர்கள் நாட்டின் மேம்பாட்டிற்காக கொண்ட கனவுகளை நனவாக்க வேண்டிய கடமை; நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அன்னல் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாஹேப் அம்பேத்கர், சாவர்க்கர், நேரு, சர்தார் படேல், சியாமா பிரசாத் முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள் நாட்டின் மீது பெரும் கனவுகளை சுமந்து போராடியவர்கள் என்று தெரிவித்தார். இந்நிலையில் காந்தி, நேருவுக்கு இணையாக சாவர்க்கர், சியாமா பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியதற்கு சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: