சின்னசேலம் பள்ளி கலவரத்தில் மாடுகளை திருடிய 3 பேர் கைது

சின்னசேலம்: சின்னசேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ் 2 மாணவி மதி கடந்த மாதம் 13ம் தேதி அதிகாலை இறந்து கிடந்தார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் 17ம் தேதி நடந்த கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டது.

இதுதொடர்பாக 324 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சிறப்பு புலனாய்வு போலீசார் வீடியோக்களை வைத்து நடத்திய தேடுதல் வேட்டையில் பள்ளி வளாகத்தில் மாட்டுப்பண்ணை பொறுப்பாளரை மிரட்டி மாடுகளை திருடி சென்ற சின்னசேலம் பூவரசன் (27), கல்லாநத்தம்மணிகண்டன்(35), ஆதிசக்தி(18) ஆகிய 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Related Stories: