காவல்துறையில் 3 அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான பதக்கம்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான போலீஸ் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல் அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுக்கு இரண்டு முறை ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான பதக்கம் வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான போலீஸ் பதக்கம் தமிழக காவல் துறையில் பணியாற்றும் 3 காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில், தமிழக காவல்துறை நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ள சங்கர், நுண்ணறிவு பிரிவு- உள்நாட்டு பாதுகாப்பு பிரிவில் ஐஜியாக உள்ள ஈஸ்வரமூர்த்தி, சேலம் மாநகர துணை கமிஷனர் மாடசாமிக்கு வழங்கப்படுகிறது.

Related Stories: