வெம்பக்கோட்டை அகழாய்வில் வேலைப்பாடுடன் கூடிய கொம்பு கண்டெடுப்பு

சிவகாசி: வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் நடந்த அகழாய்வில் வேலைப்பாடுகளுடன் கூடிய விலங்கு கொம்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் அகழாய்வு நடந்து வருகிறது. இதில், பல வண்ணத்தில் பாசி மணிகள், தங்க அணிகலன்  உள்ளிட்டவை கிடைத்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த அகழாய்வில், விலங்குகளின் கொம்பு கண்டெடுக்கப்பட்டது.

அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘‘ஏற்கனவே விலங்குகளின் எலும்புகள் கிடைத்த நிலையில், சமீபத்தில் தோண்டிய குழியில் விலங்குகளின் கொம்பு கண்டெடுக்கப்பட்டது. இது, கொஞ்சம் வேலைப்பாடுடன் இருப்பதால், பொருட்களில் அடையாளம் வரையவும், ஆயுதமாகவும் பயன்பட்டிருக்கலாம்’’ என்றார்.

Related Stories: