மனைவியுடன் தகராறில் விபரீத முடிவு மகனை கிணற்றில் வீசி கொன்று தந்தையும் தற்கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், 4 வயது மகனை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தந்தையும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர் கிராமம் காட்டுக்கொட்டகையை சேர்ந்தவர் பாஸ்கர்(35). விவசாயி. இவரது மனைவி பூங்கொடி(30). இவர்களது 4 வயது ஆண் குழந்தை பிரதீஸ்வரன்(4). கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து வெளியே சென்ற பாஸ்கர், குடிபோதையில் இரவு வீட்டுக்கு வந்தார். இரவு 11 மணியளவில் மகன் பிரதீஸ்வரனை தூக்கிக்கொண்டு வெளியே சென்றார். வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் மகனை தூக்கி வீசி விட்டு தானும் குதித்தார். தகவலறிந்து தீயணைப்பு துறை வீரர்கள் வந்து 3 மணி நேரம் போராடி நேற்று அதிகாலை 2 மணிக்கு கிணற்றில் இருந்து கயிறு கட்டி பாஸ்கர் மற்றும் பிரதீஸ்வரன் உடல்களை மீட்டனர். இதுகுறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: