நீலகிரியில் பெண் யானை உயிரிழப்பு

ஊட்டி: முதுமலை  புலிகள் காப்பகம், சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் வனத்துறை  ஊழியர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீகூர்ஹல்லா  ஆற்றின் ஓரத்தில் யானை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்து  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, வன கால்நடை  மருத்துவர், வனத்துறை உயரதிகாரிகள் சென்று இறந்து கிடந்த  யானையை பார்வையிட்டனர். இதில், 50 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பதும்,  யானையின் உடலை புலி மற்றும் காட்டு பன்றிகள் சாப்பிட்டுள்ளதும் தெரியவந்தது.  தொடர்ந்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுகளுக்காக உடல்பாகங்கள்  சேகரிக்கப்பட்டன. வயது மூப்பின் காரணமாக யானை உயிரிழந்திருக்க  வாய்ப்புள்ளது என்றும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே  முழு காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: