கடலூர் பாடலீஸ்வரர் கோயிலின் கோபுர உச்சியில் அனுமதியின்றி தேசியகொடி ஏற்றிய பாஜவினர்

கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோயில் கோபுரத்தின் உச்சியில் நேற்று காலை தேசிய கொடி ஏற்றப்பட்டிருந்தது. இந்து அறநிலையத்துறை கொடியேற்றாத நிலையில், அனுமதியின்றி இதுபோன்ற செயலில் ஈடுபட்டது யார் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து சமூக வலைதளங்களில் கோயில் கோபுரத்தின் உச்சியில் பாஜவினர் தேசிய கொடி ஏற்றியது போன்ற புகைப்படம் வெளியானது. கோயில் தரப்பில் கூறுகையில், கோயிலில் இன்று சுதந்திர தின விழா கொண்டாட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனுமதியின்றி பாதுகாப்பற்ற நிலையில் கோபுரத்தின் உச்சிக்கு சென்று தேசிய கொடியை ஏற்றியுள்ளனர்.  சம்பந்தப்பட்ட நபர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Stories: