தண்ணீர் பானையை தொட்டதற்காக தலித் மாணவன் அடித்து கொலை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி செயல்படுகிறது. இதில் படிக்கும் 9 வயதான தலித் மாணவன் இந்திர குமார் மேக்வால், கடந்த சனிக்கிழமை தண்ணீர் குடிப்பதற்காக பள்ளியில் இருந்த தண்ணீர் பானையைத் தொட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆசிரியர் சயேல் சிங், அந்த மாணவனை கொடூரமாக அடித்து தாக்கி உள்ளார். இதில், மாணவன் உயிரிழந்தான்.

மாணவனை கொன்ற ஆசிரியர் மீது கொலை, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. முதல்வர்  அசோக் கெலாட்,  மாணவனின்  குடும்பத்துக்கு ₹5 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

Related Stories: