எல்லா மொழிகளும் தேசிய மொழிதான்: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து

மும்பை: மகாராஷ்டிர மாநிலம்,  நாக்பூரில் நேற்று நடந்த  நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:

பன்முகத்தன்மையை சிறப்பாக நிர்வகிப்பதில் இந்தியாவை உலகம் சுட்டிக்காட்டுகிறது. உலகம் முரண்பாடுகள் நிறைந்தது, ஆனால், பன்முகத்தன்மையை நிர்வகிப்பது இந்தியாவால் மட்டுமே முடியும். நம் தாய் பூமி  வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் கைப்பற்றப்பட்டது.

நாம் தேவையில்லாமல் ஜாதி மற்றும் இதர கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். மொழி, உடை, கலாசாரம் போன்றவற்றில் நமக்குள் சிறிய வேறுபாடுகள் உள்ளன. ஆனால், இதில் சிக்கி கொள்ளாமல், பெரிய விஷயங்களை பார்க்கும் உணர்வு வர வேண்டும். பாரதம் மிக பெரிய நாடாக  வேண்டுமெனில் நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: