கட்சியின் நற்பெயரை கெடுப்பவர் மீது நடவடிக்கை: ராஷ்டிய லோக் ஜனசக்தி மாநில தலைவர் எச்சரிக்கை

சென்னை: ராஷ்டிய  லோக் ஜன சக்தி கட்சியின் மாநில தலைவர் ஏ.பி.சசிகுமார்  சென்னையில் அளித்த பேட்டி: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை வாழ்த்துவது  போன்று எங்களது கட்சி தலைவர் பசுபதிகுமார் பாரஸ் புகைப்படத்துன் கூடிய வாழ்த்து போஸ்டர் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. நிதிஷ்குமாருக்கும், கட்சியினருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக  சில சமூக விரோதிகள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நான் மாநில தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து கட்சியை நல்லமுறையில்  வளர்த்து வருகிறேன். எனது கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத  நபர்கள் இது போன்று செய்கின்றனர். இதுதொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். ராஷ்டிய லோக் ஜன சக்தி கட்சி எப்போதும் பாஜ கூட்டணியில் தொடரும்.

Related Stories: