×

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்: ராமதாஸ் டிவிட்

சென்னை: சீன உளவு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்த இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். இது இலங்கையின் சீன பாசத்திற்கு எடுத்துக்காட்டு.

 ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டுதான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது. இதுதான் அதன் குணம். இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

Tags : India ,Sri Lanka ,Ramadoss Dewitt , Sri Lanka's Betrayal, India, Ramadoss twit
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர...