×

சீன கப்பலை தடுத்து நிறுத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: இந்தியாவை உளவு பார்க்க வரும் சீன கப்பலை தீவிர கவனம் செலுத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் சீனாவின் உளவு கப்பல் நிறுத்தப்படுவது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டிருக்கிற அறைகூவல்.

சீனா உளவு பார்க்காமல் இருக்கவும், நாட்டின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் இல்லாத வகையில் ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டு, இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். இலங்கை வெளியுறவு அமைச்சகம், சீனாவின் யுவான் வாங்க்-5 உளவுக் கப்பல் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் ஆகஸ்ட் 16 முதல் 22ம் தேதி வரை நங்கூரமிட்டு நிறுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்திய அரசு, இலங்கை அரசின் இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. உடனடியாக இந்தியா தீவிரம் கவனம் செலுத்தி சீனக் கப்பல் வருகையை தடுத்து நிறுத்த வேண்டும்.

Tags : Waco , Chinese ship, Waiko, Govt. of India
× RELATED உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி...