முதல் பாகத்தில் ஏமாற்றிவிட்டனர்; அஸ்வினி குற்றச்சாட்டு

சென்னை: வெற்றி, அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ள படம்,‘ஜீவி 2’.வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். வெற்றி நடித்த‘ஜீவி’படத்தை இயக்கிய வி.ஜே.கோபிநாத்,‘ஜீவி 2’படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார். வரும் 19ம் தேதி ஓடிடியில் வெளியாகும் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சீமான், கே.பாக்யராஜ், சீனு ராமசாமி, தம்பி ராமய்யா கலந்துகொண்டனர்.

அப்போது அஸ்வினி சந்திரசேகர் பேசுகையில்,‘கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த எனக்கு ‘ஜீவி’முதல் பாகம் நல்ல என்ட்ரியாக அமைந்தது.‘ஜீவி’, ‘ஜீவி 2’ஆகிய படங்களுக்கு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைத்தனர். முதல் பாகத்தில் பாடல் காட்சி தருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டனர். ஆனால், இரண்டாம் பாகத்தில் அந்தக் குறை தீர்ந்து விட்டது’என்றார்.

Related Stories: