31 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார் அமலா

சென்னை: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம்,‘கணம்’.கார்த்திக் இயக்கியுள்ளார். சர்வானந்த், அமலா அக்கினேனி, ரீது வர்மா நடித்துள்ளனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். டைம்  டிராவல் கதை கொண்ட இப்படம் அடுத்த மாதம் 9ம் தேதி  திரைக்கு வருகிறது. ஏற்கனவே ‘காதல்னா சும்மா இல்ல’,‘நாளை நமதே’,‘எங்கேயும் எப்போதும்’,‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ஆகிய தமிழ்ப் படங்களில் சர்வா னந்த் நடித்திருந்தார். அமலா தமிழில் நடித்திருந்த கடைசி படம்,‘கற்பூரமுல்லை’.இது 1991ல் ரிலீசானது. இந்நிலையில், 31 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்த அமலாவுக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரு கின்றனர்.

Related Stories: