வங்கி மேலாளர் வீட்டில் 25 சவரன் கொள்ளை

அண்ணா நகர்: சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ் (37). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றுகிறார். இவர், நேற்று முன்தினம் திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் வசித்து வரும் தனது தந்தையை பார்ப்பதற்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார். இந்நிலையில், அவரது வீட்டின் கதவு உடைந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே, விஜயராஜிக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, விஜயராஜ் வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 25 சவரன், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, விஜயராஜ் அரும்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: