தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை

சென்னை: மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக  தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல்  18ம் தேதி வரை லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக  மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்  வாய்ப்பும் உள்ளது.

மேலும், குமரிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா,  அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 கிமீ  வேகம் முதல் 60 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: