விண்வெளியிலிருந்து இந்தியாவுக்கு நாசா சுதந்திர தின வாழ்த்து: வீடியோ வெளியீடு

சென்னை: விண்வெளியிலிருந்து இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சர்வதேச விண்வெளி நிலையமான நாசா, அனைத்து சர்வதேச அமைப்புகள் சார்பாக இந்தியாவிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

டிவிட்டரில் பகிரப்பட்ட வீடியோவில் விண்வெளியிலிருந்து இத்தாலி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோபோரோட்டி கூறியிருப்பதாவது:

 நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, 75வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துகள். நாசா மற்றும் அனைத்து சர்வதேச கூட்டாளிகளின் சார்பாக ககன்யான் திட்டத்தில் பணிபுரிந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வரும் இஸ்ரோவிற்கு நல்வாழ்த்துகள். எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கு நாம் அனைவரும் ஒன்றாக இருப்பது ஒரு குறிக்கோள். அடுத்த ஆண்டு ககன்யான் திட்டத்தின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து மனித விண்வெளி பயணத்தை தொடங்கும் நாடாக இந்தியா இருக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.    

Related Stories: