நிதி அமைச்சர் கார் மீது தாக்குதல்; தலைவர்கள் கண்டனம்

சென்னை: நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது தாக்குதலுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக தலைவர்): நிதியமைச்சரின் கார் மீது செருப்பு வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. எல்லையில் நாட்டைக் காப்பாற்ற போராடி மரணடைந்த ராணுவ வீரருக்கு இறுதி மரியாதை செலுத்தும் இடத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளால் பாஜவினர் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது அவர்களின் வன்முறை மனப்பான்மையை எடுத்துக்காட்டியுள்ளது. இந்த வன்செயலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெகலான் பாகவி (எஸ்டிபிஐ தேசிய செயற்குழு உறுப்பினர்):  தமிழக நிதியமைச்சரின் வாகனம் மீது மதுரை விமான  நிலையத்தில் பாஜ ரவுடிகள் காலனி வீசி தாக்குதல் நடத்தியிருப்பது  அநாகரிகத்தின் உச்சம். இது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழக அரசு  பாஜவினரின் வன்முறை அரசியலை தமிழகத்தில் துளிர்விட அனுமதிக்காமல்  இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.

இதுபோல, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: