லண்டன் விமானம் 10 மணி நேரம் தாமதம்: 342 பயணிகள் தவிப்பு

சென்னை: லண்டனில் இருந்து நாள்தோறும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு அதிகாலை 3.30 மணிக்கு வரும். அதன்பிறகு, சென்னையில் இருந்து மீண்டும் அதிகாலை 5.31 மணியளவில் லண்டனுக்கு பயணிகளுடன் புறப்படும். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சென்னை வரவேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 10 மணி நேரம் தாமதமாக வந்துகொண்டிருப்பதாக பயணிகளிடம் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், அதில் செல்ல வேண்டிய பயணிகள் தவித்தனர். பிறகு அந்த விமான பயணிகள் 342 பேரையும் விமானம் வரும் வரை தனியார் ஓட்டல்களில் விமான நிறுவன அதிகாரிகள் தங்க வைத்தனர். லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் விமானம், நேற்று மாலை 3.30 மணிக்குத்தான் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.

Related Stories: