கார் மீது மோதியதால் கோபம்; ஆட்டோ டிரைவருக்கு ‘பளார்’ .! நிதானத்தை இழந்த பெண் கைது

நொய்டா: நொய்டாவில் ஆட்டோ டிரைவரின் காலரை பிடித்து கன்னத்தில் பளார் என்று அறைந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஆட்டோ ரிக்‌ஷா ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதையடுத்து காரில் இருந்த பெண் ஒருவர், காரில் இருந்து இறங்கிவந்து ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் அவர் ஆட்டோ ஓட்டுரின் சர்ட் காலரை பிடித்து இழுத்து, அவரது கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.

நிதானத்தை இழந்து அந்த பெண் ஆட்டோ டிரைவரை தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து நொய்டா காவல்துறையும் விசாரணையை முடுக்கிவிட்டது. தற்போது அந்த பெண்ணை அடையாளங்கண்டு, அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ள போலீசார், அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

Related Stories: