பீகார் முதல்வர், துணை முதல்வர் பதவியேற்ற நிலையில் புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்பு; காங்கிரசுக்கு 4 அமைச்சர்கள் உறுதி

பாட்னா: பீகாரில் புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்க உள்ளதாகவும், காங்கிரசுக்கு நான்கு அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதை தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். கடந்த புதன்கிழமை நிதிஷ் குமார் முதல்வராகவும், ஐக்கிய ஜனதா தளம் தலைவரான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த பேச்சுவார்த்தைகள் கூட்டணி கட்சிகளிடம் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் எந்ததெந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள், எந்தெந்த துறைகள் ஒதுக்கீடு குறித்தும் தகவல்கள் வெளியாகின்றன. வரும் 16ம் தேதி (நாளை மறுநாள்) புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் பீகார் பொறுப்பாளர் பக்த சரண்தாஸ் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்கும்.

கட்சியின் பலத்திற்கு ஏற்ப மரியாதைக்குரிய ஒதுக்கீடு கிடைக்கும். அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. அமைச்சர்கள் ஒதுக்கீடு தொடர்பாக பீகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் தொலைபேசியில் பேசினேன். தேவை ஏற்பட்டால் அவரை பாட்னாவில் சந்திக்கவுள்ளேன்’ என்றார். ஏற்கனவே ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தை  பக்த சரண்தாஸ் சந்தித்து பேசினேன். துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அமைச்சரவை குறித்து ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் கட்சிக்கு 4 அமைச்சர் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: