மூளைக்காய்ச்சல் பாதிப்பால் அமெரிக்க நடிகை மரணம்

வாஷிங்டன்: மூளைக்காய்ச்சல் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட அமெரிக்க நடிகை டெனிஸ் டோவ்ஸ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  அமெரிக்க நடிகையும், தொலைகாட்சி இயக்குனருமான டெனிஸ் டோவ்ஸ் (64) கடந்த சில மாதங்களாக மூளைக்காய்ச்சல் வைரஸ் தொற்று பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது சகோதரி டிரேசி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், ‘எனது அன்புக்குரிய சகோதரி டெனிஸ் டோவ்ஸ், மூளைக்காய்ச்சல் வைரஸ் தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்தார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருக்காக பிரார்த்தனை செய்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த நடிகையாகவும், இயக்குனராகவும், சிறந்த தோழியாகவும், குடும்ப உறுப்பினராகவும் செயல்பட்ட சகோதரியின் மறைவு, எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை’ என்று கூறியுள்ளார். முன்னதாக மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தைச் சுற்றியிருந்த பாதுகாப்பு சவ்வில் டெனிஸ் ேடாவ்சுக்கு வீக்கம் ஏற்பட்டதால், அவர் கடந்த வாரமாக கோமா நிலையில் இருந்தார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: