மன்னார்குடி வேணுகோபாலசுவாமி கோயிலில் 50 ஆண்டுக்கு முன்பு திருடப்பட்ட 13ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டுபிடிப்பு

சென்னை: மன்னார்குடி வேணுகோபாலசுவாமி கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட பல கோடி மதிப்புள்ள விஷ்ணு, தேவி, பூதேவி சிலைகளை சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் அருங்காட்சியத்தில் கண்டுபிடித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வேணுகோபாலசுவாமி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி மதிப்புள்ள விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவியின் சிலைகள் திருடப்பட்டதாகவும், அதை மீட்டு தர கோரி கடந்த 28.2.2017ம் அண்டு விக்கிரபாண்டியன் காவல் நியைத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் மாயமான சிலைகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு விக்கிரபாண்டியன் காவல் நிலையத்தில் இருந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஜிபி ெஜயந்த் முரளி உத்தரவுப்படி சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் சிலைகள் திருடப்பட்ட கோயில் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி ஆய்வு செய்தனர். அப்போது புதுச்சேரியில் உள்ள இந்தோ- ப்ரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் அலுவலகத்தில் ஆய்வு செய்த போது, வேணுகோபாலசுவாமி கோயில் இருந்து திருடப்பட்ட 3 சிலைகள் கடந்த 15.6.1959ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்த போது, கோயில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் போலியானது என்று தெரியவந்தது. மேலும், கொள்ளையர்கள்திருப்பட்ட விஷ்ணு, தேசி, பூதேவி சிலைகளுக்கு மாற்றாக போலி சிலைகளை கோயிலில் வைத்து விட்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி சிலைகளை திருடியதும் உறுதியானது.

அதைதொடர்ந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் திருடப்பட்ட 3 சிலைகளின் புகைப்படங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சிலைகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அப்போது அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட சிலைகளுடன் தொல்லியல் துறை நிபுணர்களுடன் ஒப்பிட்டு பார்த்த போது, வேணுகோபாலசுவாமி கோயிலில் திருடப்பட்ட விஷ்ணு, தேவி, பூதேவி சிலைகள் அந்த அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. திருடப்பட்ட சிலைகள் அனைத்தும் 13ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் தெரியவந்தது. அதைதொடர்ந்து அமெரிக்காவில் உள்ள பல கோடி மதிப்புள்ள 3 சிலைகளையும் சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் தமிழகத்திற்கு கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

Related Stories: