சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படுகிறது. பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2022ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும். அவை முறையே சென்னை பெருநகர காவல், சட்டம் மற்றும் ஒழுங்கு (தெற்கு), கூடுதல் காவல் ஆணையர் பிரேம்ஆனந்த்சின்ஹா; கடலூர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, காவல் ஆய்வாளர் அம்பேத்கார்; சென்னை பெருநகர காவல், அடையாறு போக்குவரத்து காவல் நிலையம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவராமன்; மதுரை, மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலையம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், பழனியாண்டி; தாம்பரம் காவல் ஆணையரகம், செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குமார் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

இதேபோன்று புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல்துறை அதிகாரிகள் 2022ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் முறையே ஸ்டாலின், காவல்துறை துணை ஆணையாளர், தலைமையிடம், மதுரை மாநகரம்; கிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர்,  ஒருங்கிணைந்த குற்ற அலகு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை, சேலம்; பிருந்தா, காவல் ஆய்வாளர், ரோஷனை காவல் வட்டம், விழுப்புரம்; பிரபா, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை.

 நாமக்கல்; சீனிவாசன், காவல் ஆய்வாளர், கோடம்பாக்கம் காவல் நிலையம், சென்னை; சுமதி, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், கொடைக்கானல், திண்டுக்கல்; நாகலெட்சுமி, காவல் ஆய்வாளர், கரியாப் பட்டினம் காவல் நிலையம், நாகப்பட்டினம்;  துளசிதாஸ், காவல் உதவி ஆய்வாளர், பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு, சென்னை; பார்த்தசாரதி, காவல் உதவி ஆய்வாளர், குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, ஒருங்கிணைந்த குற்ற அலகு-1, சென்னை; இளையராஜா, காவல் உதவி ஆய்வாளர், அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சென்னை ஆகியோராவர்.  விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், தமிழக முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.

Related Stories: