×

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.252 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கான நியாமான மற்றும் ஆதாய விலையினை வழங்க ரூ.252 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 2021-22 அரவை ஆண்டில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.252 கோடி முன்பணம் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.252 கோடி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கரும்பு விவாசாயிகளுக்கான நிலுவை தொகை அனைத்து ஆலைகளிலும் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மறுதாம்பு கரும்பு சாகுபடி செய்ய முடியாமலும் கரும்புக்கான கடன் வாங்கமுடியாமலும் விவசாயிகள் தவித்து வந்த நிலையில் தமிழக அரசு இந்த ஆணையை வெளியிட்டுள்ளது.

மேலும் ரூ.252 கோடி இரண்டு மாதத்திற்குள்ளாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 12 சர்க்கரை ஆலைகள் நிலுவை வைத்துள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் போதிய விலை இல்லாமலும் தரமான கரும்புகள் வழங்க முடியாமல் ஒன்றிய அரசு வழங்கக்கூடுய தொகையை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ரூ.252 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது கரும்பு விவசாயிகளுக்கு ஒரு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது.

Tags : Government of Tamil Nadu , Tamil Nadu government issued an ordinance allocating Rs. 252 crores to sugarcane farmers!
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...