இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் அன்பில் மகேஷ்  அளித்த பேட்டி: 11ம் வகுப்பு தேர்வு என்பது மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது. நேரடியாக அவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினால் பல்வேறு சிரமங்கள் உருவாகிறது என்பதற்காக தான் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளி கல்வித்துறை நடத்தி வருகிறது.

அதை ரத்து செய்வதற்கான திட்டம் இல்லை. ஒரே நாடு ஒரே தேர்வு முறையை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து தமிழக அரசு சிந்திக்கவில்லை. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தமிழக அரசு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்றார்.

Related Stories: