தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுசேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும் முதல் ஆக.18-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மலை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இன்று ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு என்றும் குமரிக்கடல், மன்னர் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: