சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்

சேலம்: ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை, தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்ததாக எழுந்த புகாரில், சிறுமியின் தாய், கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் மற்றும் வெளி மாநிலங்களிலும் கருமுட்டை விற்பனை செய்தது அம்பலமானது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று மதியம் சேலம் தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் சிகிச்சை மையம், ஸ்கேன் சென்டர், ஆவணம் பாதுகாப்பு அறை உள்ளிட்ட 8 அறைகளை முழுமையாக மூடி சீல் வைத்தனர்.

Related Stories: