நெய்வேலியில் பயங்கரம் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி 30வது வட்டத்தை சேர்ந்தவர் வீரமணி(43). பிரபல ரவுடி. இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீரமணி வட்டம் 30ல் உள்ள தாயார் வீட்டின் வெளியே படுத்து தூங்கினார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், வீரமணியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு வீரமணியின் தாய் மற்றும் உறவினர்கள் வெளியே ஓடிவந்து பார்த்தபோது, அவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், வந்து விசாரணை நடத்தினர். நெய்வேலியில் பிரபல ரவுடியாக வலம் வந்த வீரமணியை பழிக்குபழியாக எதிரிகள் கொலை செய்தார்களா அல்லது அவரது கூட்டாளிகளுடன் தகராறு ஏற்பட்டதால் அவர்கள் கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: