ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணி, தொடர் விடுமுறை சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மாவட்ட எல்லையான சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓங்கூர் பாலத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அதிர்வு காணப்பட்டு பின்னர், பழுது ஏற்பட்டது. இந்த பாலத்தை நெடுஞ்சாலை துறையினரும், மாவட்ட நிர்வாகமுகம் 24 மணிநேரமும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இந்த இருவழி தேசிய நெடுஞ்சாலையை ஒரு வழி சாலையாக மாற்றி, ஒரே சாலை மார்க்கமாக வாகனங்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து ஏராளமான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்து செல்வதாலும், பாலத்தின் சீரமைப்பு பணிகள் காரணமாக ஒரே சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு சென்று வருகின்றன. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு  முதலே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சிறுப்பாக்கம் முதல் தொழுப்பேடு அடுத்த ஓங்கூர் பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பகுதி வரை, சுமார் 10 கிலோமீட்டர் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமத்துக்குள்ளாகினர் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories: