தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்

சென்னை: தென் சென்னை கூடுதல் கமிஷனர் உட்பட 5 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வோர் ஆண்டும் முதல்வர் பதக்கம் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, கடலூர் எஸ்பிசிஐடி இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சென்னை அடையாறு போக்குவரத்து காவல்நிலைய எஸ்.ஐ. சிவராமன், மதுரை மதிச்சியம் போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ. பழனியாண்டி, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றும் குமார் ஆகியோருக்கு முதல்வர் விருது வழங்கப்படும். இந்த விருது அறிவிக்கப்படுகிறவர்களுக்கு தங்க பதக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னர் ஒருநாள் போலீஸ் விழாவில் இந்த விருதுகளை வழங்குவார்.

Related Stories: