முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி இளம்பகவத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழக சமூக நல இயக்குனர் கடிதத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட ஏதுவாக இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலர் ஐஏஎஸ் அதிகாரி க.இளம்பகவத்தை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமித்து தக்க ஆணைகள் வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார். சமூக நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அதனை ஏற்று, இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலர் க.இளம்பகவத்தை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்து ஆணையிடுகிறது. மேலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலரின் பணிகள் மற்றும் பொறுப்புகளை நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்  திட்ட ஒருங்கிணைப்பு அலுவலரின் பணிகள் மற்றும் பொறுப்புகள் என்னென்ன என்பது அரசாணையில் பட்டியிலிடப்பட்டுள்ளது.

Related Stories: