டாஸ்மாக்கில் 19 ஆண்டுகள் கடந்தும் பணி நியமனம், பதவி உயர்வு விதிகள் எதுவும் இல்லை: விதி வகுக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் விற்பனையாளராக பணியாற்றிய மிகிரன் என்பவர் 2006ல் சூப்பர்வைசராக நியமிக்கப்பட்ட நிலையில் 2015ல் மீண்டும் விற்பனையாளர் பணிக்கு மாற்றப்பட்டார்.

இதுதொடர்பான டாஸ்மாக் நிறுவனத்தின் உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். விசாரணையின் போது, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மனுதாரரின் பணி வரன்முறைப்படுத்தப்படாததால் சூப்பர்வைசராக அவரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. சூப்பர்வைசர்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு எந்த விதிகளும் இல்லை என்று டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்த பிறகும், பணி நியமனம், பதவி உயர்வுக்கான விதிகள் வகுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை தமிழக அரசு கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன் மனுதாரரை சூப்பர்வைசர் பணியில் இருந்து விற்பனையாளராக மாற்றிய விஷயத்தில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: