போதைப்பொருள் வழக்கில் மெத்தனம் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை: மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் எச்சரிக்கை

சென்னை: போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் ஆஜராகும் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், அந்த வழக்கை சரியாக நடத்தவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை குற்றவியல் வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.

மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் மற்றும் அரசு கூடுதல் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கான அவசரக் கூட்டம் தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தலைமையில் நேற்று நடைபெற்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 10ம் தேதி நடந்த நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் போதைப் பொருள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த விஷயத்தில் காவல்துறையில் உள்ளவர்கள் தவறு செய்யக் கூடாது. தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, அலட்சியமாக, கவனக்குறைவாக, வேறு சில காரணங்களுக்காக வழக்கை சரிவர நடத்தவில்லையென்றால் அரசு வழக்கறிஞர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை பாயும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Related Stories: