எடப்பாடி உயிருக்கு அச்சுறுத்தல் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்: ஆன்லைன் மூலம் டிஜிபிக்கு மனு

சென்னை: எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் சேலத்தை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் மணிகண்டன் டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து சேலத்தை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் மணிகண்டன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னர் தென் மாவட்டங்களில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். தற்போது, மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 5 மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து இருக்கிறார். அவர் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக திரண்டு வருகிறது. இந்நிலையில் தென் மாவட்ட பயணத்தின் போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களாலும் மற்ற சமூக விரோதிகளாலும் எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் முன்னாள் முதலமைச்சராகவும் தற்போது எதிர்கட்சித் தலைவராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பாதுகாப்பு அதிகரித்து உச்சபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: