ராமர் கோயில் பணி அடுத்தாண்டு முடியும்: அறக்கட்டளை உறுதி

சுல்தான்பூர்: அயோத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒன்றிய அரசு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை அமைத்துள்ளது. சுல்தான்பூரில் நடந்த ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சியில் இந்த அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் நேற்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ராமர் கோயில் கட்டுமான பணிகள் நல்லமுறையில் நடந்து வருகின்றன. கட்டுமான பணியில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. கோயில் வடிவத்தை கண்டு மக்கள் ஆச்சரியப்படுவார்கள். 2023ம் ஆண்டு டிசம்பரில் பக்தர்களின் தரிசனத்துக்கு கோயில் தயாராகி விடும்,’ என தெரிவித்தார்.

Related Stories: