டிரம்ப் பங்களாவில் 11 ரகசிய ஆவணம்: எப்பிஐ சோதனையில் சிக்கின

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் பங்களாவில் இருந்து, அதிக முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய ஆவணங்கள் உட்பட 11 ஆவணங்களை எப்பிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு சொந்தமாக புளோரிடாவில் உள்ள மார் ஏ லகோ என்ற பங்களா உள்ளது. தேர்தலில் தோல்வியடைந்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது டிரம்ப் சில ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாகவும், அதனை இந்த பங்களாவில் பதுக்கி வைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இதன் டிப்படையில் எப்பிஐ அதிகாரிகள் கடந்த 8ம் தேதி டிரம்புக்கு சொந்தமான இந்த இல்லத்தில் சோதனை நடத்தினர். அப்போது, முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய ஆவணங்கள் உட்பட 11 ஆவணங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள், அரசாங்க பொருட்களின் தொகுப்பு, கையால் எழுதப்பட்ட குறிப்பு உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

Related Stories: