முதல் முறையாக இந்தியாவில் பயிற்சிக்கு பாக். ராணுவம் வருகை

இஸ்லாமாபாத்: இந்தியாவில் அக்டோபர் மாதம் நடக்கும் தீவிரவாத தடுப்பு பயிற்சியில் பாகிஸ்தான் ராணுவம் பங்கேற்கிறது. எஸ்சிஓ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தீவிரவாத தடுப்பு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பயிற்சி இந்தியாவின் அரியானா மாநிலம், மனேசரில் அக்டோபர் மாதம் நடக்க உள்ளது. இதில் பாகிஸ்தான் ராணுவமும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எஸ்சிஓ அமைப்பில் பாகிஸ்தானும் ஒரு உறுப்பினர் என்ற வகையில், பயிற்சியில் பங்கேற்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது. இதே போன்ற எஸ்சிஓ தீவிரவாத தடுப்பு பயிற்சி ஏற்கனவே ரஷ்யாவில் நடந்த போது இந்தியா, பாகிஸ்தான் ராணுவங்கள் பங்கேற்றுள்ளன. ஆனால், இந்தியாவில் நடக்கும் பயிற்சியில் பாகிஸ்தான் பங்கேற்பது இதுவே முதல்முறை. இருதரப்பு உறவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பயிற்சிக்காக பாகிஸ்தான் ராணுவம், இந்தியா வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: