சில்லி பாய்ன்ட்...

* அல்டிமேட் கோ கோ லீக் தொடர் இன்று புனேவில் தொடங்குகிறது. சென்னை குயிக் கன்ஸ், தெலுங்கு யோதாஸ், மும்பை கில்லாடிஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ஒடிஷா ஜுக்கெர்நட்ஸ், ராஜஸ்தான் வாரியர்ஸ் என 6 அணிகள் களம் காணுகின்றன. இறுதி ஆட்டம் செப்.4ம் தேதி நடைபெறும். இந்த ஆட்டங்கள் தினமும்  இரவு 7.30, இரவு 8:45 மணிக்கு சோனி நெட்வொர்க் சேனல்களில் ஒளிபரப்பாகும்.

* காமன் வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்கள், வீராங்கனைகள் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘பதக்கங்களின் எண்ணிக்கை வைத்து நமது உண்மையான பலத்தை முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் பலப் போட்டிகளில் கடும் சவாலை தந்ததுடன் நமது வீரர்கள் நூலிழையில் தான் பதக்கங்களை நழவ விட்டனர். கூடவே இந்திய விளையாட்டின் பொற்காலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

* ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும்  ‘தங்கப்பந்து’ விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட 30பேர் கொண்ட பட்டியலில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் லியோனல் மெஸ்ஸி(அர்ஜென்டீனா), ஜூனியர் நெய்மர் (பிரேசில்) ஆகியோர் இல்லை. அதே நேரத்தில போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ 19வது முறையாக பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்து உள்ளார்.

* ‘அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து தர நினைப்பவர்கள் டெஸ்ட் போட்டியின் சிறப்புத்தன்மையை நீர்த்துப் போக செய்பவர்கள்’ என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் சேப்பல் விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

* டெஸ்ட் ஆட்டங்களில் பொறுமையாக ஆடி ரன் சேர்த்து, அணியையும் கரை சேர்க்க உதவுபவர் இந்திய வீரர் புஜாரா. அதனால் ஒருநாள், டி20 தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும்  ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் சக்சஸ் அணிக்காக விளையாடும் புஜாரா நேற்று 107(79பந்து, 7பவுண்டரி, 2சிக்சர்) ரன் விளாசி எல்லோரையும் கவனிக்க வைத்துள்ளார்.

Related Stories: