×

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 2023 டிசம்பரில் நிறைவடையும்: அயோத்தி அறக்கட்டளை தகவல்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 2023 டிசம்பரில் நிறைவடையும் என ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார். அயோத்தி, அயோத்தி, அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதையடுத்து 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி வைத்தார். அடிக்கல் நாட்டினார். தற்போது கட்டுமானப்பணிகள் இரண்டு ஆண்டுகளை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நிறைவடையும் என ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதுகுறித்து கூறும்போது, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டிடப்பணிகள் முடிக்கப்பட்டு கருவறையில் ராமரை பக்தர்கள் தரிசம் செய்யும் வகையில் கோவில் தயாராகி விடும். கட்டுமானப் பணிகள் நல்ல வேகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிகளில் இரும்பு பயன்படுத்தப்படுவதில்லை. கோயிலின் வடிவமைப்பு மக்கள் வியக்கும் வகையில் இருக்கிறது. இவ்வாறு சம்பத் ராய் கூறினார்.

Tags : Ramar Temple ,Ayodhya ,Ayodhi Foundation , Construction of Ram temple in Ayodhya to be completed by December 2023: Ayodhya Trust Information
× RELATED அயோத்தியில் ரூ1,800 கோடியில் ராமர் கோயில்: அறக்கட்டளை கூட்டத்தில் அறிவிப்பு