×

நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் மறுவகைப்படுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க ஏதுவாக, கால்வாய்,நீர்நிலைகளை கிராம நத்தமாக மறுவகைப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ள பாதிப்புகளும், நீர் செல்ல முடியாமல் வறட்சியும் ஏற்படுத்துவதாக உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் நரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள வாய்க்கால் நிலத்தை கிராம நத்தமாக வகைமாற்றம் செய்து பட்டா வழங்க உத்தரவிடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 65 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் கிராமத்தில் நீர்நிலையின் ஒரு பகுதியை கிராம நத்தமாக மாற்றி அதில் பள்ளிக்கூடம் கட்டப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே அரசு செய்த சட்டவிரோத செயலின் அடிப்படையில் கோரிக்கை வைக்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் அந்த நிலத்தை மறுவகைப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : High Court ,Government of Tamil Nadu , Water encroachment should not be reclassified in order to grant a license: High Court orders the Tamil Nadu government.
× RELATED தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில்...