தேவையில்லாமல் அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.காவல்துறை பணியில் சேரும் போலீசாரை அதிகாரிகள் தங்களது வீடுகளில் வேலை செய்ய பயன்படுத்தி வரும் இந்த ஆர்டர்லி முறை தொடர்வது பற்றி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை தெரிவித்து இருந்தார். மேலும் ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசு மற்றும் டிஜிபியிடம் இருந்து அது வருவதில்லை என நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

ஆடர்லி பயன்படுத்தும் காவல்துறை உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உண்டு.எனவே இந்த வழக்கில் டி.ஜி.பி.யை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். ஆர்டர்லி முறையை ஒழிக்க, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வருகிற 18-ந்தேதிக்குள் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்,என நீதிபதி தெரிவித்தார்.

ஆடர்லி முறை ஒழிப்பு குறித்து சென்னை ஐகோர்ட்டு நேற்று கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஏடிஜிபிக்கள் மகேஷ் குமார் அகர்வால் ஏடிஜிபி சங்கர் ஐஜி லோகநாதன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார் மாவட் எஸ்பி அளவில் இருந்து ஏடிஜிபி டிஜிபி வரையிலான அனைத்து காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் பணியாற்றக் கூடிய ஆடர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி ஜி பி சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருக்கிறார் . இதை செயல்படுத்தாத அதிகாரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: