வில்லிவாக்கத்தில் கலைஞரின் நினைவு தின பொதுக்கூட்டம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு

அம்பத்தூர்: கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு வில்லிவாக்கத்தில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில், ‘உடன்பிறப்பே எங்கள் உயிர் மூச்சு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

வில்லிவாக்கம் மேற்கு பகுதி திமுக செயலாளர் கூ.பி.ஜெயின்  தலைமை வகித்தார். இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், மாநில, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: