மடிப்பாக்கம் சபரி சாலையில் குப்பை குவியலால் துர்நாற்றம்; அகற்ற கோரிக்கை

ஆலந்தூர்: பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம் 187வது வார்டுக்கு உட்பட்ட சபரி சாலையில் பல இடங்களில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு, ஆண்டு கணக்கில் அகற்றப்படாமல் குவியலாக கிடக்கிறது. இதனை மாடுகள் கிளறுவதால் சாலை முழுவதும் குப்பை பரவி கிடப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், மழைக்காலங்களில் குப்பையுடன் தண்ணீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.

 

தூய்மை பணியாளர்களும் இதனை கண்டுகொள்வதே இல்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுபற்றி பலமுறை புகார் கொடுக்கும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சாலையின் வழியாக மாநகர பேருந்து, கார், பைக் மற்றும் நடந்து செல்வோர். மூக்கை பொத்தியபடி செல்லும் நிலை உள்ளது. மேலும் நடைபாதையில் இந்த குப்பைகள் இருப்பதால் மக்கள் சாலையில் நடந்து செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு குப்பையை அகற்ற உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: