செல்போன் கடையில் திருட்டு சிறுவன் உட்பட 2 பேர் கைது; 7 செல்போன், 4 டேப்லட் பறிமுதல்

சென்னை:  செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7 செல்போன்கள், 4 டேப்லட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னைபுதுப்பேட்டை லப்பை தெருவில் வசித்து வரும் அகமது இக்பால் (37), அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 3ம் தேதி இரவு  தனது செல்போன் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள்  கடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கடையில் வைத்திருந்த 7 செல்போன்கள் மற்றும் 4 டேப்லட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அகமது இக்பால்,   எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் மணிகண்டன் (எ) மணி, (19) என்பது தெரிந்தது. அவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 செல்போன்கள் மற்றும் 4 டேப்லட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 16 வயது  சிறுவன் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

Related Stories: