மாணவர்களுக்கு இலவச சைக்கிள்; எம்எல்ஏ வழங்கினார்

சென்னை:  வண்ணாரப்பேட்டை ஜி.ஏ சாலையில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ராயபுரம் தொகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச சைக்கிள்களை எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி வழங்கினார்.

Related Stories: