தண்டையார்பேட்டையில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட மின் வாரிய அலுவலகம்; எம்எல்ஏ திறந்து வைத்தார்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் ரூ. 60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார். தண்டையார்பேட்டை செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலக பிரிவு செயல்பட்டு வந்தது. இங்கு அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வந்து செல்வதால்  நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து இந்த மின்வாரிய அலுவலகத்தை தண்டையார்பேட்டை ரெட்டை குழி தெருவில் அமைந்துள்ள மின்வாரிய துணை மின் நிலைய வளாகத்திற்கு இடமாற்றம் செய்ய மின்வாரியத்துறை  திட்டமிட்டது.

 

இதற்காக ரூ. 60 லட்சம் செலவில் புதிய அலுவலகம்  கட்டும் பணி நடைபெற்றது. இதற்கான பணிகள் முடிவுற்ற நிலையில், தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வந்த ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகம் நேற்று முதல் இங்கு இட மாற்றம் செய்யப்பட்டு, இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். செயற்பொறியாளர்  ஜெயச்சந்திரன் வரவேற்றார். ஜே.ஜே.எபினேசர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்து, பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கவுன்சிலர் ரேணுகா, உதவி செயற்பொறியாளர்கள்  அருணாச்சலம், சொக்கலிங்கம், அப்பன் சீனிவாசன்,ஆனந்தன், மோகன் மற்றும் உதவி பொறியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: