திருத்தணி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் பிடிபட்டனர்

திருத்தணி: திருத்தணி அருகே திருவாலங்காடு கிராமத்தின் வழியே ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் மேற்பார்வையில் திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்ஐ பூபாலன் தலைமையில் போலீசார் திருவள்ளூர் - அரக்கோணம் சாலையில் உள்ள பழையனூர் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சிறிய ரக லோடு வேனை போலீசார் மடக்கிடனர்.

இந்த சோதனையில், தலா 30 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, திருநின்றவூரை சேர்ந்த சண்முகம் மகன் சுரேஷ் (25), மற்றும் தினகரன்  என்பவரது மகன் பெருமாள் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்திய லோடு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் திருவள்ளூர் மாவட்ட உணவுபொருள் கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதான 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: