போக்குவரத்து அதிகாரி மனைவியிடம் வழிப்பறி

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். போக்குவரத்து துறையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயா (50). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருவள்ளூர் வரை கடைக்கு சென்று மீண்டும் பிற்பகல் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

பேரம்பாக்கம் - சத்தரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் தலையில் கர்ச்சீப்பாலும், முகத்தை மாஸ்க்காலும் மறைத்து வந்த 2 மர்ம நபர்கள் விஜயா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துள்ளனர். அப்போது விஜயா செயினை பிடித்துக் கொள்ளவே இரண்டரை சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர். இதுகுறித்து விஜயா மப்பேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: